விண்டோஸ்... இன்று ஏற குறைய 99 % கணினிகளில் சென்றடைந்து உள்ளது . இதன் முக்கிய கரணம் அதை எளிமையாக பயன்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல ஒரு புதிய மென்பொருளை மிக எளிமையாக install செய்ய முடியும் என்பதால் தான்.

நான் ஒரு முறை லினக்ஸ் -இல் 'Fire fox' install செய்ய மிகவும் சிரமப்பட்டு விட்டேன் . என்னைபோன்ற கம்ப்யூட்டரில் குறைந்தது 10 மணி நேரம் உட்கார்ந்து இருபவனுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் , புதிதாக கணினி துறைக்குள் வருபவர்களுக்கு Linux- யை பயன்படுத்த எவ்வளவு கடினமாக இருக்கும் என்று எண்ணி பாருங்கள் ...
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், லினக்ஸ் Development செய்பவர்கள் தயவு செய்து விண்டோசை போல எளிமையாக மென்பொருட்களை கையாளும் விதத்தில் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
லினக்ஸ் -இல் மாயாஜாலங்கள் செய்யும் வல்லுனர்கள் "விண்டோஸ்" போலவே லினக்ஸ் -ஐ கண்டிப்பாக மாற்ற முடியும்.

அது மட்டுமன்றி புதிதாக மென்பொருட்களை உருவாக்கும் மென்பொருள் நிறுவனங்கள் அவற்றின் எல்லா வெளியிடுகளும் , எல்லா லினக்ஸ்களிலும் எளிமையாக install செய்யும் விதத்தில் உருவாக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் லினக்ஸ் தானாகவே தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்று புகழ் பெற முடியும்.



