பறக்கும் கார் ...
ஹாலிவுட் படங்களில் எதிர்காலங்களில் வருவதாக தோன்றும் பறக்கும் கார்கள் என்னை மிகவும் கவந்த ஒன்று. நான் இருக்கும் பெங்களூர் ஒரு நெரிசல் நிறைந்த நகரமா இருக்கின்றது. பெங்களூர் மட்டுமல்ல சென்னை உள்பட எல்லா பெருநகரங்களிலும் இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது ..
பெரும் செலவில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் குகை பாலங்கள்,இனிவரும் எதிர்காலத்திற்கு சரிப்படும் என்று தெரியவில்லை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் வாகனங்களின் எண்ணிக்க இருமடங்காக அதிகரித்து வருகின்றது .
இத்தகைய ஒரு சுழ்நிலையில் பறக்கும் காரின் தேவை ஒரு முக்கியமனதாக எனக்கு தோன்றுகிறது. இதற்கான முயற்சிகள் 1960 களிலேயே தோன்றி விட்டது என்றாலும் அதன் தேவை இப்போதுதான் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.இப்போது பாலங்களில் மீது முதலிடு செய்யும் அரசு பறக்கும் கார்களின் உற்பத்திக்கான ஆராய்ச்சியில் முதலீடு சேய்யுமாயின் அது சிறப்பாக இருக்கும்.
அமெரிக்காவே இன்னும் இத்தகை முயற்சிகளில் இறங்காத பொழுது நமக்கு ஏன் இந்த வேலை என்று தோன்றலாம். அது முற்றிலும் தவறான கருத்து.ஏன் என்றால் அமெரிக்கா இப்போதிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா என்பது சந்தேகமே ?
இத்தகைய ஒரு சூழ்நிலையில் சாலை போடுவது அதை சீர் படுத்துவது போக்குவரத்து நெரிசல் போன்றவற்றிலிரிந்து பறக்கும் கார்களின் மூலமாக நாம் முற்றிலும் நம்மால் தப்பித்து கொள்ள முடியும்.

ஏற்கனவே இஸ்ரேல் போன்ற நாடுகள் இத்தகைய முயற்சிகளில் மிகவும் மும்மரமா இருங்கி இருக்கின்றது. நினைத்து பாருங்கள் சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ நெரிசல் நேரங்களில் சுமார் 15 கி.மி செல்வதற்குள் குறைந்தது 2 மணி நேரம் எடுத்து கொள்கிறோம் . இத்தகை கார்கள் உருவாக்கப்பட்டால் வெறும் 10 நிமிடங்களில் விரும்பிய இடங்களை சென்றடைய முடியும் ...விபத்துகள் குறையும் ...
இது பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ...நன்றி...
சிவா

நல்லதொரு தொகுப்பு.... பகிர்வுக்கு நன்றிகள்...
பதிலளிநீக்குமிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
பதிலளிநீக்குநன்றி
ஈழவன்
நன்றி சந்ரு...
பதிலளிநீக்குகண்டு பிடித்தால் நல்லது தான்.
பதிலளிநீக்குஅருமையான ஒரு பதிவு, வாழ்த்துக்கள்....
கண்டுபிடிக்கட்டும் பார்க்கலாம்
பதிலளிநீக்கு