செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

லினக்ஸ்...இதை மாற்றுவார்களா ..!

லினக்ஸ்... ஒரு தரமான operating system என்பது மட்டுமல்ல வைரஸ்கள் தாக்குதல்,Spy ware ஊடுருவல் மற்றும் Security problem என்ற எந்த தொல்லையும் இல்லாத ஒரு சிறந்த Operating System என்பதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை. இருந்தும் அது இன்னும் நிறைய பேரிடம் சென்று சேரவில்லை என்கின்ற ஒரு கவலை எனக்கும் உண்டு .

விண்டோஸ்... இன்று ஏற குறைய 99 % கணினிகளில் சென்றடைந்து உள்ளது . இதன் முக்கிய கரணம் அதை எளிமையாக பயன்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல ஒரு புதிய மென்பொருளை மிக எளிமையாக install செய்ய முடியும் என்பதால் தான்.




நான் ஒரு முறை லினக்ஸ் -இல் 'Fire fox' install செய்ய மிகவும் சிரமப்பட்டு விட்டேன் . என்னைபோன்ற கம்ப்யூட்டரில் குறைந்தது 10 மணி நேரம் உட்கார்ந்து இருபவனுக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் , புதிதாக கணினி துறைக்குள் வருபவர்களுக்கு Linux- யை பயன்படுத்த எவ்வளவு கடினமாக இருக்கும் என்று எண்ணி பாருங்கள் ...
என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், லினக்ஸ் Development செய்பவர்கள் தயவு செய்து விண்டோசை போல எளிமையாக மென்பொருட்களை கையாளும் விதத்தில் உருவாக்க முயற்சிக்க வேண்டும்.
லினக்ஸ் -இல் மாயாஜாலங்கள் செய்யும் வல்லுனர்கள் "விண்டோஸ்" போலவே லினக்ஸ் -ஐ கண்டிப்பாக மாற்ற முடியும்.


அது மட்டுமன்றி புதிதாக மென்பொருட்களை உருவாக்கும் மென்பொருள் நிறுவனங்கள் அவற்றின் எல்லா வெளியிடுகளும் , எல்லா லினக்ஸ்களிலும் எளிமையாக install செய்யும் விதத்தில் உருவாக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் பட்சத்தில் லினக்ஸ் தானாகவே தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்று புகழ் பெற முடியும்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

வாங்க கொஞ்சம் பறக்கலாம்...

புதிய கண்டு பிடிப்புகளின் மீது எனக்கு எப்போதும் தணியாத ஆர்வம் உண்டு...

பறக்கும் கார் ...
ஹாலிவுட் படங்களில் எதிர்காலங்களில் வருவதாக தோன்றும் பறக்கும் கார்கள் என்னை மிகவும் கவந்த ஒன்று. நான் இருக்கும் பெங்களூர் ஒரு நெரிசல் நிறைந்த நகரமா இருக்கின்றது. பெங்களூர் மட்டுமல்ல சென்னை உள்பட எல்லா பெருநகரங்களிலும் இது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது ..
பெரும் செலவில் கட்டப்படும் மேம்பாலங்கள் மற்றும் குகை பாலங்கள்,இனிவரும் எதிர்காலத்திற்கு சரிப்படும் என்று தெரியவில்லை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் வாகனங்களின் எண்ணிக்க இருமடங்காக அதிகரித்து வருகின்றது .


இத்தகைய ஒரு சுழ்நிலையில் பறக்கும் காரின் தேவை ஒரு முக்கியமனதாக எனக்கு தோன்றுகிறது. இதற்கான முயற்சிகள் 1960 களிலேயே தோன்றி விட்டது என்றாலும் அதன் தேவை இப்போதுதான் தெரிய ஆரம்பித்து இருக்கிறது.
இப்போது பாலங்களில் மீது முதலிடு செய்யும் அரசு பறக்கும் கார்களின் உற்பத்திக்கான ஆராய்ச்சியில் முதலீடு சேய்யுமாயின் அது சிறப்பாக இருக்கும்.
அமெரிக்காவே இன்னும் இத்தகை முயற்சிகளில் இறங்காத பொழுது நமக்கு ஏன் இந்த வேலை என்று தோன்றலாம். அது முற்றிலும் தவறான கருத்து.ஏன் என்றால் அமெரிக்கா இப்போதிருக்கும் சூழ்நிலையில் இது போன்ற முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா என்பது சந்தேகமே ?
இத்தகைய ஒரு சூழ்நிலையில் சாலை போடுவது அதை சீர் படுத்துவது போக்குவரத்து நெரிசல் போன்றவற்றிலிரிந்து பறக்கும் கார்களின் மூலமாக நாம் முற்றிலும் நம்மால் தப்பித்து கொள்ள முடியும்.




ஏற்கனவே இஸ்ரேல் போன்ற நாடுகள் இத்தகைய முயற்சிகளில் மிகவும் மும்மரமா இருங்கி இருக்கின்றது. நினைத்து பாருங்கள் சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ நெரிசல் நேரங்களில் சுமார் 15 கி.மி செல்வதற்குள் குறைந்தது 2 மணி நேரம் எடுத்து கொள்கிறோம் . இத்தகை கார்கள் உருவாக்கப்பட்டால் வெறும் 10 நிமிடங்களில் விரும்பிய இடங்களை சென்றடைய முடியும் ...விபத்துகள் குறையும் ...

இது பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன் ...

நன்றி...
சிவா

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

மூன்றாம் உலக போர்...

ஜப்பான் மீது அணு குண்டு வீசப்பட்டு நேற்றுடன் 64 ஆண்டுகள் ஆகிறது அதுபற்றிய ஒரு பற்றிய ஒரு சிறிய செய்தி...
அணு குண்டு ...
சும்மா பேர கேட்ட அதிருதில்ல ...
உண்மைதான்...1945 ஆண்டு ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் எல்லாம் இப்பொழுது அமெரிக்காவிடம் இருக்கும் அணுகுண்டுகளிடம் மண்டி இடவேண்டும்.
வகை வகையான உணவுகள் போல ஹைட்ரஜன் குண்டு நியூட்ரான் குண்டு என்று பல வகையான் அணு குண்டுகள் முன்னணி நாடுகள் பலவற்றில் இருக்கின்றன.
இப்போதிருக்கும் நிலையில் அணு ஆயுத போர் என்று ஒன்று வருமானால் , உலகில் மனித இனம் மட்டுமின்றி மற்ற அனைத்து உயிரினங்களும் முற்றிலும் அழிந்து போகும்.எந்தொரு புல் பூண்டும் தப்பிக்க முடியாது.
ஒரு தோராய கணக்கு படி அமெரிக்காவிடம் 2000-3000 , ரஷ்யாவிடம் 1500-2500 மற்ற நாடுகளிடம் மொத்தம் 500-1000 அணு குண்டுகள் இருப்பதாக தெரிகிறது.
இவை அனைத்தும் மூன்றாம் உலகபோரின் போது வீசப்பட்டால் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு பூமியில் ஒரு புல் பூண்டு கூட முளைக்காது .
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் மதனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது "மூன்றாம் உலக போர் எப்படி நடக்கும் ? அதற்கு அவர் "மூன்றாம் உலகபோர் எப்படி நடக்கும் என்று எனக்கு தெரியாது ஆனால் நான்காம் உலக போர் வெறும் ஈட்டி மற்றும் அம்புகளால் தான் நடக்கும்" என்றார்.அது உண்மைதான் ,ஏனெனில் மூன்றாம் உலக போரிலேயே மனித இனம் முற்றிலும் அழிந்து போகும் என்பது தான் உண்மை...
BBC வெளியிட்டுள்ள ஒரு செய்தி படம் , இதில் ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்டபோது நிகழ்ந்தாக எடுக்கப்பட்டுள்ளது...






நன்றி ...

சிவா

திங்கள், 29 ஜூன், 2009

தொலை தூர கணினிகளை இயக்க ஒரு மென்பொருள் ...

உலகத்தில் உள்ள எந்த ஒரு கணினிய இயக்கவும் அல்லது பார்வை இடவும் ஒரு சிறப்பான மென்பொருள் உள்ளது.
முதலில் கிழே கொடுத்துள்ள link -ல் இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொண்டு கட்டுப்படுத்தும் மற்றும் கட்டுப்படும் இரண்டு கணினிகளிலும் install செய்யவும் .

இப்பொழுது இரண்டு கணினிகளிலும் இம்மென்பொருளை run செய்யுங்கள்.

கட்டு படும் கணினியில் இந்த மென்பொருளை Run செய்யும் பொழுது இதில் கேட்கும் pass word கட்டுப்படுத்தும் கணினியிலிருந்து கொடுக்கவும்,அவ்வளவும் தான்.

இப்பொழுது நீங்கள் இங்கிருந்தே மற்ற கணினிகளை இயக்க முடியும்.
இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
http://www.teamviewer.com





உங்கள் அன்பன்
சிவா...

வியாழன், 25 ஜூன், 2009

எளிய முறையில் Flash இணைய பக்கங்கள் உருவாக்க ஒரு இலவச மென்பொருள்

பொதுவாக இணைய பக்கங்களை உருவாக்க HTML தெரிந்திருக்க வேண்டும். ஆனால் flash-ல் மிக எளிமையாகவும் கவர்ச்சியாகவும் அதே நேரத்தில் மிக வேகமாகவும் இணைய பக்கங்களை உருவாக்கி அசத்த முடியும்.
இவ்வாறு Flash- ல் இணைய பக்கங்களை உருவாக்க ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது.இதற்காக எந்த ஒரு மென்பொருளையும் நாம் கற்க வேண்டிய அவசியம் இலலை,இணைய பக்கங்களை உருவாக்க அவர்களே வழிகாட்டுகின்றனர்.இணையத்தில் இலவசமாக இத்தனை பெற இங்கே சொடுக்கவும்.
http://www.trendyflash.com/









உங்கள் அன்பன்...
சிவா.

புதன், 24 ஜூன், 2009

தமிழ் -ஆங்கில மொழிமாற்றி ...

நான் பணிபுரியும் நிறுவனம் ஜேர்மன் நாட்டை சேர்ந்தது.ஒருமுறை German-to-English translation-செய்ய முயன்றபோது இந்த இணையம் கிடைத்தது.
மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்றால் மென்பொருள் நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தினால் தான் இத்தகைய சேவையை பெறமுடியும் என்ற நிலையில் இங்கு இலவசமாக மொழிமாற்றம் நாமே செய்து கொள்ளலாம்.
ஜேர்மன்-to-தமிழ் அல்லது English-to-Tamil மொழிமாற்றம் சேய்ய ஒரு நல்ல இணைய பக்கம் என்று நான் கருதுகிறேன்.
இதனை பெற இங்கே சொடுக்கவும்..
http://www.tamildict.com




இதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் , நாம் புதிதாக ஏதேனும் சொற்கள் சேர்க்க விரும்பினால் அதனையும் செய்ய முடிகிறது .இப்போதைக்கு 17513 சொற்கள் இதில் சேர்க்க பட்டுள்ளது.

உங்கள் அன்பன்
சிவா ...

வெள்ளி, 19 ஜூன், 2009

விண்டோஸ்க்கு ஒரு இலவச பராமரிப்பு மென்பொருள்

நீங்கள் windows பயன்படுத்துபவரா?
அப்படியானால் உங்களுக்கு உதவும் ஒரு பயனுள்ள மென்பொருள்...
இதன் பயன் படுத்தி விண்டோசை நல்ல முறையில் பராமரிக்கலாம் .
இது கிட்ட தட்ட எல்லா பராமரிப்பு செயல்களையும் கொண்டுள்ளது .
இணையத்தில் இலவசமாக கிடைக்கும் இம்மென்பொருளை நன்றாக படித்து விட்டு பயன்படுத்தி பாருங்கள்.











































இதை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இடுக்கையை சொடுக்கவும் "http://www.iobit.com/advancedwindowscareper.html"